மூளையால் புது செல்களை வயது வரம்பின்றி உற்பத்தி செய்ய முடியும். உங்களுடைய நினைவாற்றலையும், சிந்தனை திறன்களையும் இதன் மூலமாக மேம்படுத்த முடியும். இது எப்படி சாத்தியமாகும்? உடற்பயிற்சிகள் மற்றும் தியானத்தால் இது சாத்தியப் படும்.
மன அழுத்தம் மூளை புது செல்களின் உற்பத்தியை குறைக்க கூடியது.
உங்களுடைய மூளையை மாற்றியமைக்க 5 வழிமுறைகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கலாம்.
குறிப்பெடுத்துக்கோங்க.
எப்பொழுதும் புதியதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள தின நேரத்தை ஒதுக்குங்க. 59 மொழிகள் பேசி ஒரு நபர் சாதனை படைத்துள்ளார். சர்வ சாதரணமாக 4 மொழிகள் பேசுபவர்கள் கூட உங்களுக்கு தெரிந்தவர்களில் இருக்கலாம். ஆர்வத்துடன் சில பல வார்த்தைகளை கற்க முயற்சி செய்யுங்க. உங்களுடைய மூளையை உங்களால் மாற்றி அமைக்க முடியும்.
கலைகளில் கவனத்தை செலுத்தி கற்கும் பொழுது மூளை செல்கள் புதியதாக உற்பத்தி ஆகும். நடனம், ஓவியம், பாடுதல், இசையமைத்தல் இவை போன்ற கலைகளின் உங்களுக்கு விருப்பமானதை கற்க முயற்சி செய்யுங்க.
அடுத்து, வேகமான walking, swimming போன்ற உடற்பயிற்சிகள் உங்களுடைய மூளையின் நினைவாக மையத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்க கூடியது.
புதியதாக நீங்க எதை கற்றாலும் உங்களுடைய மூளையை மாற்றியமைக்க கற்றல் பயன்படும்.
தியானத்தின் மூலமாக உங்களுடைய உள்ளுணர்வை தூண்ட முடியும். மன அழுத்தத்தை நீக்க முடியும். நேர்மறை எண்ணங்களை சிந்திக்க பயிற்சி அளிக்க முடியும். உங்களுடைய மூளையை மாற்றியமைக்க தியானம் பயன்படும்.
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருந்து பாருங்க. எப்பொழுதும் நேர்மறையாக சூழலை கையாண்டு பாருங்க. மாற்றங்கள் தெரியும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.