ஒரு காட்டில் வெட்டுக்கிளியும் எறும்பு கூட்டமும் அருகருகில் வாழ்ந்தன. கோடை காலம் அது. எறும்புகள் சாரை சாரையாக உணவுகளை சேகரிப்பதில் மிக பரபரப்புடன் ஈடுபட்டு இருந்தன. இதனை கண்ட வெட்டுக்கிளி அவர்களை பார்த்து சிரித்தது.
முட்டாள்களே! கோடை காலம் இது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலம் இது. ஆடுங்கள்! பாடுங்கள்! ஏன் இப்படி தேவை அற்று எப்பொழுதும் உழைத்துக் கொண்டு உள்ளீர்கள்? என கேட்டது. எறும்புகளின் தலைவன், குளிர் காலத்திற்காக உணவை சேமிக்க வேண்டிய காலம் இது. விழித்துக் கொள்! நீயும் எங்களைப் போல், உணவு சேகரித்து வைத்துக் கொள் என்றது.
ஆனால், எறும்பு தலைவன் சொன்னதை வெட்டுக் கிளி காது கொடுத்து கேட்கவில்லை. கோடை காலத்தை சோம்பேறி தனத்திலும், பொழுது போக்கிலும் கழித்தது.
குளிர்காலமும் வந்தது. எறும்புகள் பாதுகாப்பாக, தேவையான உணவுகளுடன் குளிர்காலத்தை கடந்தன. ஆனால், வெட்டுக் கிளியோ குளிரில் உணவு கிடைக்காமல், உயிரை நீத்தது.
எந்த காலத்தில் எந்த செயலை செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்யா விட்டால், இழப்புகள் நேரிடும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.