சூழ்நிலைகள் மாற்றத்திற்கு உள்ளாவது. மனிதர்களின் மனமும் மாற்றத்திற்கு உள்ளாவது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது. மாற்றங்கள் நிறைந்த இந்த உலகில், தேவையான நம்பிக்கை தன்னம்பிக்கை.
சூழ்நிலைகளுக்கு தக்க, பக்குவ பட்ட தன்னம்பிக்கையோடு, வாழ்வில் முன்னோக்கி செல்லும் உயிரினமே, வாழ்க்கை போராட்டத்தில், சவால்களை தாண்டி சென்று, வெற்றியை தக்கவைத்து கொள்கிறது.
அடுத்து என்ன! என்ற எண்ணமே, முடிந்து போன மாற்ற முடியாத தருணங்களுக்கு, ஆறுதலாக அமைகிறது. இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி உள்ள இந்த வாழ்க்கையை, முன்னோக்கி நகர்த்திட தன்னம்பிக்கை தான் ஒரே கருவியாக அமைகிறது.
இன்பத்திலேயே தளைத்தவன் தேனில் விழுந்த எறும்பு போல அழிந்துப் போகின்றான். துன்பத்திலேயே தளைத்தவன் தீயில் விழுந்த பஞ்சு போல அழிந்துப் போகின்றான்.
‘இன்பமும் துன்பமும், நிரந்தரம் இல்லை’ என்ற விழிப்போடு, வாழ்வின் இறுதி மூச்சி வரை, வாழ வேண்டும் தன்னம்பிக்கையோடு.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.
நமது பலவீனம் எப்போதுமே பலம் பலம்
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு குத்து போதும் உனக்கு” என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் … நீங்கள் நினைத்தது சரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும்.
”எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது?” என்று கேட்டான்.
குரு சொன்னார்: “ இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை”
குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.
Maybe a inspirational small story to you also
நல்ல கதை Shiva.