மனதில் வலிமை இருக்கும் பொழுது மட்டும் தான் தடைகளை உடைத்து வாழ முடியும்.
வாழ்வில் ஏற்படும் தடைகளை நீங்க பூதாகரமாக பார்க்கறீங்களா? அல்லது எளிதில் கடக்க முடியற சிறிய விஷயமாக பார்க்கறீங்களா? என்பது உங்க மன வலிமையை பொறுத்தது.
நான் சொல்லப் போகும் 19 அறிகுறிகள் சாதாரண மனிதரை விட உங்களுக்கு மன வலிமை அதிகம் என்பதை உணர்த்தும். அவற்றை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
உணர்ச்சிகள் சிந்தனையை பாதிக்கும் என்ற புரிதலுடன் முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில் உணர்ச்சிகளையும் logic க்கையும் balance செய்து உங்களால் முடிவெடுக்க முடியுதா? உங்களுக்கு மன வலிமை அதிகம் என்பற்கான அறிகுறி இது.
‘இதனால் இது முடியாது அதனால் அது முடியாது’ என excuse கேட்க்காமல் எப்படி இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? மன வலிமை மிக்கவரின் பழக்கம் இது.
‘எப்பொழுதும், எல்லா நேரத்திலும், பயனுள்ள செயல்களையே செய்யனும்,’ என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கா? என யோசித்துப் பாருங்க. மன வலிமை மிக்கவரால் நேரத்தை வீணடிக்க முடியாது.
வாழ்வில் சில மாற்றங்கள், எப்படி முயன்றாலும் மாற்ற முடியாத மாற்றங்களாக இருக்கும். ஆற்றலோட மதிப்பை புரிந்து இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பாக ஆற்றலை வீணடிக்காமல் செயல் படுபவரா நீங்கள்?
சாதாரண மனித மனதால் இது முடியாது. மன வலிமை மிக்கவர் ஆற்றலுக்கு முக்கியத்தும் கொடுப்பார்.
பயம் ஏற்படுத்தும், தடையான விஷயத்தை கண்டு அஞ்சாமல் தைரியமாக விஷயத்தை எதிர்கொள்ள மன வலிமை மிக்கவரால் முடியும்.
தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள மன வலிமை மிக்கவரின் ( Mentally Strong ) மனம் எப்பொழுதும் தூண்டும். Excuse கேட்க பிடிக்காது.
தன் நிலைமை இது தான் என தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டு சுய மேம்பாட்டிற்கு நேரத்தை ஒதுக்குபவராக மனவலிமை மிக்கவர் இருப்பார்.
பிறரோட வெற்றி உங்களை தாழ்த்தி காட்டினாலும் அவரின் முன்னேறத்தை கொண்டாடும் தைரியம் உங்களுக்கு இருக்கா? என யோசித்துப் பாருங்க. மன வலிமை மிக்கவரின் அறிகுறி இது.
தன்னுடைய மதிப்பை முழுதும் புரிந்து ‘சூழ்நிலை ஏற்படும் பொழுது, தனக்காக முன்னுரிமை கொடுத்து, எளிதாக முடிவெடுக்க,’ மன வலிமை மிக்கவரால் முடியும்.
உங்களுக்கு உண்மையாக இருப்பவரா நீங்க? உங்களுடைய வார்த்தைகள், உங்களுடைய நடத்தைக்கு ஏற்ப இருக்குமா? மன வலிமை மிக்கவரின் அறிகுறி இது.
கஷ்டங்கள் கசப்பான பாதையை ஏற்படுத்தி தந்தாலும், இந்த துன்பங்களை மனதளவில் சிறப்பாக கையாள உங்களால் முடிந்தால்! மன வலிமை மிக்கவரின் அறிகுறி உங்களுக்கு இருக்கு. தோல்விகளை வாழ்வின் முடிவென பார்க்க உங்களுக்கு தெரியாது.
வாழ்வை பற்றிய நேர்மறையான அணுகுமுறை ஒரு பக்கம் இருந்தாலும் உண்மையை கண்கள் மறைத்து விடாமல் செயல் பட தெரிந்திருக்கும் குணம், தன்னை தாழ்த்தி கொள்ளாமல் அதே சமயம் தன்னுடைய செயலுக்கு முழு பொறுப்பெடுக்கும் குணம், பிரச்னைகளிலேயே வாழாமல் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை உருவாக்கும் குணம், தின வாழ்வில் சந்திக்கும் மனிதர்களிடம் இருந்து விடாமல் ஏதேனும் கற்கும் குணம் மன வலிமை மிக்கவருக்கான குணங்கள்.
பலவீனத்தை மறைக்க நினைக்காமல் பலவீனத்தை சரி செய்வதற்கான செயலில் இறங்கும் எண்ணம் கொண்டவரா, தன்னை தானே ஊக்குவித்து வாழ்வபவரா, மாற்றங்களுக்கு ஒத்துப் போகும் தன்னம்பிக்கை மிக்கவரா, ஒரு நொடியில் கனவு நனவாகாது என்பத புரிந்து பொறுமை மிக்கவரா நீங்க இருப்பதுண்டா? மன வலிமையின் அறிகுறிகள் இது.
‘அனைத்தையும் நேர்மறையாக கடந்து செல்ல உங்களை ஊக்குவிக்க கூடிய ஒரு ஊக்கியாக செயல்படுவது உங்களுடைய மன வலிமை’.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.