ஒரு நாள் காலைப் பொழுதில், ரகு நடைப் பயணத்தில் இருந்தார். ஒரு நாய், அவரை பின் தொடர்ந்தது.
அவருக்குள் ஒரே பயம்! வேகமாக விரைந்தார். நாயும் அவரை வேகமாக பின் தொடர்ந்தது. ரகு ஓடினார். நாயும் அவர் பின்னால் விரைவாக ஓடி வந்தது. அவருக்கோ நாய் துரத்தும் காரணம் புரியவில்லை.
இதனை கண்ட, அருகே விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன், சிரித்தபடி அவர் அருகில் ஓடி வந்தான். ‘என்ன அங்கிள் நாய் துரட்டுகிறதா?’ என்றான். பான்ட் பாக்கெட்டில் எலும்பு பொம்மை இருந்தால், நாய் துரத்த தானே செய்யும்! என்றான்.
அப்பொழுதுதான், ரகுவிற்கு, தான் தன் மகளுக்கு வாங்கிய எலும்பு பொம்மையை, தன் பான்ட் பாக்கெட்டில் வைத்தது, ஞாபகத்திற்கு வந்தது.
அந்த சிறுவனின் பார்வையில், ‘அவருக்கு சிக்கல் எங்கிருந்து உருவானது?’ என தெளிவாக தெரிந்தது. சிக்கலின் காரணியை கண்டுபிடித்து விட்டான்.
சிக்கல்களுக்கு தீர்வுகள் எங்கு உள்ளது? என தெரியாமல் , ஓடி ஒளிந்துக் கொண்டால், சிக்கல்கள் தீர்த்து விடும் என நம்புவது சரியல்ல.
சிக்கலுக்கு காரணமான ‘காரணியை’ கண்டு பிடுங்கள். காரணிக்கு, தீர்வை கொடுங்கள்.
– Uma, Life Coac
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.