‘சிக்கல்களை’ தீர்ப்பது எப்படி? How to Solve All Your Problems in Tamil | AsK LIFE Motivation

Solve All Your Problems Tamil Quotes

பணக்காரர் ஒருவர், ஒவ்வொரு நாள் இரவும்,  ஒரே பிராத்தனையை கடவுளிடம் பிராத்தித்தார். அவர் தினமும் தனது பிரார்த்தனைகளை மீண்டும் மீண்டும் கடவுளிடம் பிராத்தித்தார். 

“கடவுளே, தயவுசெய்து எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், குறைந்தபட்சம் ஒரு தயவையாவது செய்யுங்கள் – இதை நான் என் வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை, நான் தான் இந்த பூமியில் மிகவும் மகிழ்ச்சியற்ற மனிதன். என் வாழ்க்கையை ஏன் பிரச்சினைகளால் நிறைந்திருக்கிறீர்கள்? எனது சிரமங்களை வேறு யாருடனும் பரிமாற நான் தயாராக இருக்கிறேன், யாராவது இருப்பார்கள் – எனது கஷ்டங்களை வேறு ஒருவருடன் பரிமாறிக் கொள்ள அருள் புரியுங்கள். நான் ஒன்றும் பேரின்பம் கேட்கவில்லை. எனது கவலைகளை வேறொருவருடன் பரிமாறிக் கொள்ள இந்த ஒரு வாய்ப்பை மட்டும் எனக்கு வழங்க உங்களால் முடியவில்லையா? இது பேராசை இல்லை! ” என அந்த பணக்காரர் கடவுளிடம் தினம் புலம்பினார்.

ஒரு நாள் இரவு அவர், கனவில், கடவுளைக் கண்டார். “உங்கள் துயரங்கள் அனைத்தையும் பைகளில் சேகரித்து கோவிலுக்கு கொண்டு வாருங்கள்” என கடவுளின் குரலை கேட்டார் அவர். இந்த கனவு, நகரம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் வருகிறது.

எனவே முழு நகர மக்களும் அவர்களின் துயரங்களை பெரிய பைகளில் அடைத்து அவர்கள் மண்டபத்திற்கு கொண்டு வருகிறார்கள். இந்த மனிதனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “எனக்கு நேரம் வந்துவிட்டது! ஏதோ ஒரு நல்ல பெரிய விஷயம் நடக்கப்போகிறது! ” என நினைத்தார் பணக்காரர்.

அவர் தனது மூட்டையுடன் கோவிலுக்கு விரைந்தார். வழியில், மற்றவர்களும் விரைந்து வருவதை அவர் கண்டார்.

அவர் கோவிலை அடையும் நேரத்தில், அவருக்கு பயம் ஏற்படுகிறது, அதிக பயம் ஏற்படுகிறது, ஏனென்றால் மக்கள் அவரை விட பெரிய பைகளை எடுத்துச் செல்வதை அவர் கண்டார். “இவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நல்ல விஷயங்களைச் சொல்வார்கள், அவர்கள் பெரிய பைகளை எடுத்துச் செல்கிறார்கள்!” என மனதில் யோசித்தார் அந்த மனிதர்.

கோவிலுக்கு  செல்லலாமா?, வேண்டாமா? என கொஞ்சம், தயங்கத் தொடங்கினார் அவர். ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்து வருகிறார். எனவே,  “என்ன நடக்கிறது என பார்ப்போம்.” என சொல்லிக் கொண்டே கோவிலை அடைந்தார்.

அனைவரும் மண்டபத்திற்குள் நுழைகிறார்கள். “உங்கள் பைகளை கோவில் மண்டபத்தை சுற்றி வைக்கவும்!” என ஒரு  குரல் கூறியது. அனைவரும் தங்கள் பைகளை மண்டபத்தை சுற்றி வைத்தனர்.  “இப்போது நீங்கள் விரும்பும் எந்த மூட்டையையும் தேர்வு செய்யலாம்.” என மீண்டும் ஒரு குரல் கேட்டது.

அதிசயமாக, எல்லோரும் தனது சொந்த பைகளுக்கு விரைந்தார்கள்!

இந்த பணக்காரரும்  தனது சொந்த பையை நோக்கி வேகமாக ஓடினார், வேறு யாராவது அதைத் தேர்ந்தெடுத்தால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டு  விடும் என பயந்தார். எல்லோரும் தனது சொந்த பைகளைத் தேர்ந்தெடுத்தனர். மிகுந்த நிம்மதியுடன், தங்கள் பைகளை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். தனது துன்பங்களை பரிமாறிக்கொள்ள தனது வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்த இந்த பணக்கார மனிதர் கூட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

பிரச்சனைகளை தவிர்க்க நினைக்காதீர்கள். தீர்க்க நினைங்கள். 


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.