இரண்டு துறவிகள் மாலை நேரத்தில் மடத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தது. சாலை ஓரங்களில் தண்ணீர் குட்டைகள் தேங்கி இருந்தன. ஒரு இடத்தில், ஒரு அழகான இளம் பெண் ஒரு குட்டையின் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.
அவளை, இரண்டு துறவிகளும் தூக்கிச் சென்று சாலையின் மறுபக்கத்தில் விட்டுவிட்டு, மடத்துக்குச் செல்லும் வழியைத் தொடர்ந்தார்.
அடுத்தநாள் மாலையில் இளைய துறவி மூத்த துறவியிடம் வந்து, “ஐயா, துறவிகளாகிய நாம் ஒரு பெண்ணைத் தொட கூடாது அல்லவா?” என்று கேட்டார்.
மூத்த துறவி “ஆம்” என பதிலளித்தார்.
பின்னர் இளைய துறவி, ‘ஆனால் ஐயா, சாலையோரத்தில் அந்த பெண்ணை எப்படி தூக்கினீர்கள்?’ என கேட்டார்.
மூத்த துறவி அவரைப் பார்த்து புன்னகைத்து, ‘நான் அவளை சாலையின் மறுபக்கத்தில் விட்டுவிட்டேன். ஆனால் நீ இன்னும் அவளை சுமந்து கொண்டிருக்கிறாய்!” என்று சொன்னார்.
அதிகப்படியான சிந்தனை மன களங்கத்தை ஏற்படுத்தும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.