அதிக சர்க்கரையால், மூளைக்கு தீய பாதிப்பு! How Sugar Affects Your Brain in Tamil | AsK LIFE Motivation

Sugar Affects Brain Tamil Quotes

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிற்கும், சர்க்கரை குளுக்கோஸ் வடிவத்தில் ஆற்றலை தருகிறது.

இந்த குளுக்கோஸின் அளவு ஒரு பங்கு உடலுக்கு தேவை எனில் அதில் அரை பங்கு மூளைக்கு ( brain ) மட்டுமே தேவைப்படுகிறது.

மூளையின் பணியான சிந்தனை, நினைவாற்றல் மற்றும் கற்றல் போன்ற அனைத்து செயல்களும் சரியாக இருக்க ஒவ்வொரு செல்லிற்கும் தேவையான குளுக்கோஸின் அளவுமுறை சரியாக இருக்க வேண்டும்.

அளவிற்கு மீறிய சர்க்கரையை நீங்க உண்ணும் பொழுது மூளைக்கு தீய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பாதிப்புகள் என்ன என இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.

அதிக சர்க்கரை அளவு அறிவு திறன், நினைவாற்றல் மற்றும் கவனக் கூர்மையை தற்காலிகமாக குறைத்து விடுகிறது.

உங்களுடைய சுய கட்டுப்பாட்டை இழக்க காரணமாக இருக்கிறது.

சர்க்கரை அளவு உணவில் அதிகமாக இருந்தால் மனநிலை மற்றும் உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மூளை ரத்த குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பழங்கள் காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளில் இருந்தும், பானங்கள் இனிப்புகள் போன்ற செயற்கையாக உருவாக்கிய பொருட்களில் இருந்தும் அன்றாடம் சர்க்கரையை எடுத்துக் கொள்கிறோம்.

நீங்க எப்பொழுதும் சோர்வாக உணர்த்தாலோ, உடல் எடை அதிகமாக இருந்தாலோ, எப்பொழுதும் பசித்து கொண்டே இருந்தாலோ, இரத்த அழுத்தம் அதிகமாக இருந்த்தாலோ, உங்களுடைய தோல் குறைபாட்டுடன் இருந்தாலோ நீக்க அதிக அளவிலான சர்க்கரையை உணவில் எடுப்பது காரணமாக இருக்கலாம்.

அதிக சர்க்கரையை உணவின் மூலம் எடுப்பதை தவிர்க்க, ஒரே சமயத்தில் அதிக அளவிலான உணவை உண்ணாமல், கால இடைவெளி விட்டு அடிக்கடி உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க. அதிக அளவிலான நீர் அருந்துங்க. அதிக fibre உணவுகளை எடுத்துக்கோங்க. பதப்படுத்தப் பட்ட உணவுகளை, ஆரோக்கியமற்ற இனிப்புகளை தவிர்த்திடுங்க.

விழிப்புடன் உணவருந்தினாலே சர்க்கரை உடலில் மிகையாமல் தவிர்த்திடலாம்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: