இவ்வுலகில் உள்ள எந்த ஒரு உயிராலும், தன் பிரச்சனைகளை தானே தீர்த்து கொள்ள முடியாது. ஆனால், மனித இனத்தால் முடியும். அதற்கான வரமாக, இயற்கை முடிவெடுக்கும் திறனை மனிதனுக்கு கொடுத்துள்ளது.
துடுப்பை பயன்படுத்தாத படகு எப்படி ஆற்றில் பயணிக்குமோ? அப்படி, முடிவெடுக்க பயந்து வாழ்க்கை செல்லும் திசையில் பயணிப்பது சரியல்ல.
பிறர் மன தூண்டுதலால், பிறரின் ஆதிக்கத்தால் எடுக்கப் படும் முடிவுகளே மனித வர்க்கத்தில் ஏராளம். வளர்ச்சியை நோக்கி பயணிக்க கிடைக்கும் ஒரு வாய்ப்பு, பிறர் ஆதிக்க முடிவினால், சுய முடிவெடுக்க முடியாத திறனால் தடைப்பட்டு விடுகிறது. ஏதோ ஒரு முடிவை கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்ற எண்ணம் தவிர்த்து, சரியான சுய முடிவை எடுக்க வேண்டும் என்ற விழிப்புடன் செயல் செயல்படும் பொழுது, இந்த நிலையை மாற்றி விடலாம்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும், மேல்மனம் மற்றும் ஆழ்மனதிற்கும் தொடர்பு உண்டு.
உங்க வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும், சிறிய விஷயமோ பெரிய விஷயமோ, நீங்க எடுக்கும் முடிவு, உங்களுடைய வாழ்க்கையின் தரத்தை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.
எந்த முயற்சியும் இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒரு முயற்சி எடுப்பது வாழ்க்கை அனுபவத்தை கொடுக்கும். இந்த புரிதலுடன் எப்பொழுது சுய முடிவை எடுக்க முயற்சி எடுங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.