வசந்த காலத்தில், அழகாக வண்ண மலர்களுடன் பூக்க கூடிய இரண்டு செடிகளை தன் கிராமத்து தோட்டத்தில் வளர்க்க ராகவன் திட்டமிட்டார். அதற்காக, தன்னிடம் உள்ள இரண்டு விதைகளை தோட்டத்தில் அருகருகில் விதைத்தார்.
நல்ல வளமான மண் அது. மண்ணை கண்ட பூரிப்பில், முதல் விதை, “நான் கம்பீரமாக வளர விருபுகிறேன்! என் வேர்களை ஆழமாக மண்ணில் செலுத்தி, நல்ல பிடிப்பை ஏற்படுத்தப் போகிறேன். அழகிய மொட்டுகளை உற்பத்தி செய்து, வண்ண மலர்களாக பூத்து குலுங்க போகிறேன். சிறுவர்கள், வண்டுகள் மற்றும் குருவிகள் என பலருக்கும் பயனுள்ள வாழ்க்கையை வாழப் போகிறேன். தென்றல், சூரியன் என இயற்கையின் ஆசீர்வாதத்தை உணரப் போகிறேன்!” என்றது. அதன் எண்ணங்களுக்கு ஏற்ப வாட்ட சாட்டமாக வளர ஆரம்பித்தது.
இரண்டாவது விதையோ, “எனக்கு பயமாக உள்ளது. இந்த ரிஸ்க் ஐ என்னால் எடுக்க முடியாது. வேர்களை மண்ணுக்குள் ஆழமாக செலுத்தினால் அங்கே மிக இருட்டாக இருக்கும். அங்கே என்ன நடக்கும் என சொல்ல முடியாது. கடினமான பாறை அங்கே இருக்கலாம். மென்மையான என் வேர் முளைகளை அந்த பாறை சேதப்படுத்தலாம். யார் கண்டது! மொட்டுக்கள் முளை விடும் பொழுது, ஏதேனும் விலங்குகள் அதனை கடித்து உண்டு விடலாம். குழந்தைகள் என் வண்ண மலர்களை பிடித்து இழுத்து சேதப்படுத்தலாம். பாதுகாப்பான சூழ்நிலை வரும்வரை காத்திருப்பது மிக்க நல்லது!” என வளராமல் காத்திருந்தது.
வசந்த காலமும் வந்தது. முதல் விதை தான் சொன்னது போல, கம்பீரமாக வண்ண மலர்களுடன் வளர்ந்து நின்றது. ஆனால், இரண்டாவது விதையோ அப்படியே இருந்தது. உணவு தேடி வந்த குருவி, இரண்டாவது விதையை நொடி பொழுதில் எடுத்து விழுங்கியது.
எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வாழும் பொழுது, வாழ்க்கையே ரிஸ்க்காக மாறி விடும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.