தெளிவாக & வேகமாக சிந்திப்பது எப்படி? ( How To Think Clearly and Faster? ) என இப்ப பார்க்கலாம்.
Cell phone, laptop இவற்றோட data processing speed அதிகமாக இருக்கும் பொழுது, அவை தரத்தில் உயர்ந்து இருக்கும். அதன் காரணமாக விலை உயர்வாக இருப்பதை பார்த்திருப்பீங்க.
இது போல தான் மனித மூளையும். உங்களால் தெளிவாக, வேகமாக சிந்திக்க முடிந்தால்( thinking clearly & faster ) உங்களுடைய தரம் உயரும்.
சிந்தனை திறனை ( thinking ability ) உயர்த்த, 5 முக்கிய குறிப்புகள் இருக்கு, அவற்றை குறிப்பெடுத்து தின வாழ்வில் பயன் படுத்துங்க.
5 முக்கிய குறிப்புகள் இதோ:
- குறிப்பு 1: அறிவிற்கு சவாலான விஷயங்களை அடிக்கடி செயல்படுத்துதல் ( Challenging Knowledge )
- குறிப்பு 2: மூளையின் சுறு சுறுப்பை மேம்படுத்துதல் ( Improving Brain Activity )
- குறிப்பு 3: தெளிவான எண்ணங்களை கொண்டிருத்தல் ( Clear Thoughts )
- குறிப்பு 4: கவன கூர்மையை அதிகரித்தல் ( Focus Improvement )
- குறிப்பு 5: புதிய திறன்களை கற்றல் ( Learning New Skills )
குறிப்பு 1: அறிவிற்கு சவாலான விஷயங்களை அடிக்கடி செயல்படுத்துதல் ( Challenging Knowledge )
சாதாரணமாக நீங்க செய்யும் செயல்கள் உங்களுடைய சிந்தனையை எப்பொழுதும் போல வைத்திருக்கும். சிந்தனையை மேம்படுத்த வேகப் படுத்த சவாலான விஷயங்களை அடிக்கடி குறுகிய நேரத்தில் செய்ய பழகுங்க.
உதாரணமா, mobile ல் நீங்க கேம் விளையாடும் பொழுது level 1, level 2 , level 3 என ஒவ்வொரு level அடுத்தடுத்து செல்ல செல்ல உங்களுடைய சிந்தனைக்கு சவாலாக விஷயங்களை சிந்தித்து செய்வீங்க.
Task ஐ complete செய்ய குறுகிய நேரம் மட்டுமே உங்களுக்கு இருக்கும். உங்களுடைய அறிவிற்கு சவாலான ஒரு நல்ல brain game ஐ அடிக்கடி விளையாண்டு பழகும் பொழுது அடிக்கடி வேகமாக முடிவெடுப்பீங்க. இதனால் வேகமாக சிந்திக்க முடியும். Chess போன்ற விளையாட்டை விளையாடலாம்.
இதே போல, தினசரி வாழ்வில் நீங்க சிந்திக்கும் விஷயங்களில் சிக்கலான விஷயங்களை சிந்திக்கும் சூழலை உருவாக்கி அடிக்கடி வேகமாக சிந்தித்து பழகுங்க.
“உங்களால் செய்ய முடியாது” என நீங்க சவாலான நினைக்கும் விஷயங்கள், செய்து முடிக்கும் பொழுது மன திருப்தியை நல்ல பலனை தருவதாக இருத்தால் அந்த விஷயங்களை செய்ய முற்படுங்க.
சுய ஒழுக்கத்தை ( self decipline ) மேம்படுத்தும் விஷயங்கள் சவாலான விஷயங்களாக இருக்கலாம். சுய ஒழுக்கத்தை மேம்படுத்த தேவையான எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு சவாலாக உள்ளது? என யோசித்துப் பாருங்க. அந்த விஷயங்களை சிந்தித்து செயல் படுத்துங்க.
தெரியாத நபர்கள், சூழல் இவற்றில் செயலாற்றுவது உங்க சிந்தனைக்கு சவாலாக இருக்கலாம். செயல் படுத்தி பழகும் பொழுது சிந்தனை திறன் மேம்படும்.
இது போல சவாலான விஷயங்களை செய்து பழகும் பொழுது, கடினமாக சிந்திக்க பழக்கப் பட்ட மனதால் சாதாரண விஷங்களை எளிதாக வேகமாக சிந்திக்க முடியும்.
குறிப்பு 2: மூளையின் சுறு சுறுப்பை மேம்படுத்துதல் ( Improving Brain Activity )
மூளை சுறு சுறுப்பு சிந்தனையை மேம்படுத்தும். எப்பொழுதும் positive ஆக சிந்திக்கும் பொழுது, மூளை சுறு சுறுப்பு மேம்படும். சூழல் negative ஆக இருந்தாலும் positive ஆக சிந்திக்க பழகுங்க.
positive ஆக சிந்திக்கும் நபர்கள் உங்களை சுற்றி இருக்குமாறு அமைத்துக் கொள்ளும் பொழுது, நன்றி உணர்வை வெளிப் படுத்தும் பொழுது, நல்லதை மட்டுமே பார்த்து, கேட்டு, பேசி பழகும் பொழுது, positive ஆக சிந்திக்க முடியும்.
Yoga, walking போன்ற உடற்பயிற்சியால் மூளை சுறு சுறுப்பு மேம்படும். Meditation, நல்ல உறக்கம் மனதை மேம்படுத்தும். ஆரோக்கிய உணவுகள் மூளை சுறு சுறுப்புடன் செயல் பட ஊக்குவிக்கும்.
brain games மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.
மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது கூட மூளை சுறு சுறுப்பை மேம்படுத்துவது தான்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி மூளை சுறு சுறுப்பை மேம்படுத்துங்க. தெளிவாக, வேகமாக சிந்திக்க முடியும்.
குறிப்பு 3: தெளிவான எண்ணங்களை கொண்டிருத்தல் ( Clear Thoughts )
சரியானது எது? தவறானது எது? என்ற எண்ணங்களில் நல்ல தெளிவு இருக்கும் பொழுது வேகமாக, தெளிவாக சிந்திக்க முடியும்.
வாழ்க்கை நோக்கத்தில் ( life purpose ) நல்ல தெளிவுடன் இருங்க. உணர்வுகள் உங்களை கட்டுப் படுத்தும் பொழுது உணர்வுகளை நீங்க கட்டுப் படுத்த தெரிந்திருங்க. பயம், கவலை, கோபம் போன்ற உணர்வுகள் ( emotions ) உங்களை ஆதிக்கம் செய்யாமல் செயல்படும் பொழுது, தெளிவாக சிந்திக்கலாம்.
தேவை இல்லாத விஷயங்களை மனதில் நினைத்து மன அழுத்தத்தை ( depression ) கொண்டிருக்கும் பொழுது, அந்த அழுத்தமே, தெளிவற்ற தன்மையை சிந்தனையில் ஏற்படுத்தும். மனதில் மன நிறைவு இருக்கும் பொழுது சிந்தனை தெளிவாகவும், வேகமாகவும் இருக்கும். தின வாழ்வில், options ஐ குறைவாக வைத்திருக்கும் பொழுது சிந்திக்கும் வேகம் அதிகரிக்கும்.
உதாரணமா, நீங்க cell phone ஐ online store ல் வாங்க நினைக்கறீங்க. இந்த price ல் இருந்து, இந்த price க்குள் உள்ள இந்த brands cell phone என options ல் தெளிவுடன் குறைவாக வைத்திருக்கும் பொழுது, எத்தனை வகையான cell phone online store ல் இருந்தாலும், நீங்க select செய்து உள்ள குறைந்த options ல் உள்ள தெளிவு உங்களை வேகமாக சிந்திக்க வைக்கும்.
குறிப்பு 4: கவன கூர்மையை அதிகரித்தல் ( Focus Improvement )
ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க மனதினால் முடியும். கவனம் சிதறும் பொழுது அந்த விஷயத்தைப் பற்றிய தெளிவு குறையும்.
கவனக் கூர்மையை ( focus ) அதிகரிக்க அதிகரிக்க, வேகமாக சிந்திக்க முடியும். தியானம் கவனக் கூர்மையை மேம்படுத்தும். Brain games கவனக் கூர்மையை அதிகரிக்கும்.
நீங்க சரியாக உறங்காமல் மன அழுத்தத்தில் இருந்தீங்கனா, மன தெளிவு குறைந்து, தெளிவாக வேகமாக சிந்திக்க முடியாது.
போதைப் பொருட்கள், சில வகை மருந்துகள் கூட, மன தெளிவை குறைக்கும்.
Tv ல், cell phone ல் அதிக தேவை இல்லாத விஷயங்களில் மனதை சிதற விட்டீங்கனா, மன தெளிவு குறையும்.
இது போன்ற தவறுகளில் இருந்து விடு படுங்க. தின வாழ்வில் தேவையான முக்கிய விஷயங்களில் மட்டும் மனதை செலுத்துங்க. மன தெளிவு அதிகரித்து, வேகமாக சிந்திக்கலாம்.
குறிப்பு 5: புதிய திறன்களை கற்றல் ( Learning New Skills )
எந்தெந்த பழக்கங்களை சிறு வயதில் இருந்தே நீங்க அதிகமா சிந்தித்து உங்களுக்கு பழக்கம் உள்ளதோ, அந்த விஷயங்களில் செயல்படறப்ப, உங்களால் வேகமாக சிந்தித்து செயல் பட முடியும்.
அதனால், உங்களுக்கு எந்தெந்த புதிய திறன்களில் விருப்பமோ அந்தந்த திறன்களை அடிக்கடி பயிற்சி செய்து கத்துக்கோங்க. நாள் ஆக ஆக, அந்த புது திறமைகளைப் பற்றிய சிந்தனையை வேகப் படுத்த முடியும்.
உதாரணமா, முதல் முறை நீங்க கார் ஓட்ட கற்ற பொழுது, கார் ஓட்டுவதைப் பற்றிய உங்க சிந்தனை எப்படி இருந்தது? இப்பொழுது பல முறைகள் கார் ஓட்டியப் பின்பு கார் ஓட்டுவதைப் பற்றிய உங்க சிந்தனை வேகம் எப்படி உள்ளது? யோசித்துப் பாருங்க.
திட்டமிடல், நிர்வகித்தல், non verbal communication ஐ கவனிப்பதில் குறைபாடு, மொழிகளை கற்றலில் குறைபாடு போன்ற social skills உங்களுக்கு குறைவாக இருக்கும் பொழுது சிந்திக்கும் வேகமும் குறைவாக இருக்கும். Social skills ஐ மேம்படுத்துங்க.
தெளிவான சிந்தனை,‘சரியானதாக இல்லாமல், வேகமாக சிந்தித்து’ பலனில்லை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.