கரோலி டகாக்ஸ் உலகில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர். துப்பாக்கி சூட்டில் அவர் பல தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்ஷிப்பை வென்றவர். தன் தேசத்திற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல, 1940 ஆம் ஆண்டு தயாராகி கொண்டிருந்தார்.
ஆனால் 1938 ஆம் வருடம் ஒரு ராணுவ அமர்வில், துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தும் தன் வலது கையை இவர் இழக்க நேரிட்டது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இவரின் கனவு நொறுக்கி போனது. மருத்துவனையில் ஒரு மாதத்தை கழித்தார். இருப்பினும், தன் கனவை விட்டு கொடுக்க இவர் தயாராக இல்லை. சுய பட்சாதாபமும் கொள்ள இவர் விரும்பவில்லை. யுக்தியுடன் சிந்தித்தார்.
ஆரோக்கியமாக உள்ள தன் இடது கையை துப்பாக்கி சுட பயன்படுத்த நினைத்தார். பிறரிடம் தன் திட்டத்தை வெளிப்படுத்தாமல் முழு பயிற்சி எடுத்தார்.
உலக யுத்தம் 2 ன் காரணமாக 1940 மற்றும் 1944 ஒலிம்பிக்ஸ் ரத்து செய்யப் பட்டது. இருப்பினும், 1948 மற்றும் 1952 ல் நடைபெறற ஒலிம்பிக்ஸ்ஸில் தங்க பதக்கம் வென்றார்.
வாழ்வில் எப்படி பட்ட கஷ்டங்கள் ஏற்பட்டாலும், சரியான அணுகுமுறையுடன் கூடிய ‘யுக்தியை’ செயல்படுத்தும் பொழுது வெற்றியை பெறலாம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.