வாழ்க்கையை கட்டுப்படுத்த, உங்களுக்கு ‘உள்ளுணர்வு ( intuition ) சார்ந்த அறிவு நிலை’ மேலோங்கி இருக்கனும்.
உங்களுடைய ஆழ் மன எண்ணங்களை மாற்றி அமைக்க உங்களுக்கு தெரிந்து இருக்கனும்.
அறிவு நிலை உயர்ந்து இருப்பதற்கும், ‘உள்ளுணர்வு சார்ந்த அறிவு நிலை’ உயர்ந்து இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. உள்ளுணர்வு அறிவுக்கு சரியான விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, கட்டுப் படுத்த, ‘வழி காட்ட’ தெரியும்.
உங்க கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களை, உதாரணமாக, எப்பொழுதும் சோம்பலாக இருப்பது, ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என தெரிந்தும் அதிகம் சாப்பிடுவது, அதிகமாக உறங்குவது, இது போன்ற செயல்களை எப்படி கட்டு படுத்தனும்? என்ற விழிப்புணர்வு ‘உள்ளுணர்வு சார்ந்த அறிவு நிலை’ உங்களுக்கு தெரியப்படுத்தும்.
தியானத்தின் மூலமாகவோ, உணர்வுபூர்வமான பிராத்தனை மூலமாகவோ, மாற்று எண்ணத்தை திரும்ப திரும்ப நினைப்பதன் மூலமாகவோ, பரிகாரம் செய்யும் பொழுதோ, இந்த அனைத்து கட்டுப் படுத்த முடியாத விஷயங்களுக்கு காரணமான ஆழ் மன எண்ணங்களை உங்களால் மாற்றி அமைக்க முடியும்.
வாழ்க்கையையும் கட்டுப் படுத்த முடியும்.
‘பிறரோ சமுதாயமோ உங்க வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை, எப்படி உங்களால கட்டுப் படுத்த முடியும்?’ என்ற கேள்வி உங்களுக்கு தோனலாம்.
நீங்க ஒரு ‘வாழும் காந்தம்’. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ‘வாழும் காந்தம்’. வலிமைமிக்க காந்தத்தின் கட்டுப்பாட்டில் மற்ற வலிமை குறைந்த காந்தங்கள் ஈர்க்கப் படுவது இயற்கை.
பிறர், ‘உங்களுக்கு இப்படி தான் செய்ய வேண்டும்?’ என விருப்ப பட்டாலும், ‘அதனை எப்படி ஏற்றுக் கொள்ளனும்?’ என முடிவெடுப்பது உங்களின் விருப்பம். உங்க வாழ்க்கைக்காக நீங்க வலிமை மிக்க காந்தமாக மாற பாருங்க.
உங்களுக்கு அமைந்த, அமைத்துள்ள, அமைய போகும் அனைத்து விஷயங்களுக்கும் நீங்க மட்டும் தான் முழு காரணம் என நீங்க பொறுப்பேற்கும் பொழுது, உங்க வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சக்தி உங்களுக்குள்ளாகவே உள்ளது என்ற புரிதல் உங்களுக்கு ஏற்படும். வாழ்வை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்திடுவீங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.