வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை சரித்திரத்தையும் நீங்க ஆராந்து பாருங்க.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களின் வாழ்க்கை தடம் புரண்டத்தையும், அதில் இருந்து அவர்கள் வைராக்கித்துடன் மீண்டெழுந்தார்கள் என்பதும், புது வெற்றி பாதையை உருவாக்கினார்கள் என்பதும் உங்களுக்கு புரியவரும்.
ஏதோ சில காரணங்களுக்காக உங்க வாழ்க்கை பாதை தடம் புரண்டு வேறு திசையில் சென்றிருந்தால் வாழ்க்கையை சரி செய்து நல்ல விதத்தில் மீண்டு உங்களால் வாழ முடியும். எப்படி முடியும்? அதற்கு 4 படிநிலைகள் இருக்கு. அவை என்ன? என இப்ப நாம பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
முதலாவதாக,
பழைய திசை மாறிய வாழ்வை நினைத்து புலம்பவோ அதையே நினைத்து வருந்திக்கொண்டோ இருக்க கூடாது.
இரண்டாவதாக,
பழைய வாழ்வில் ஏற்பட்ட தவறால் ஏதேனும் ஒரு வாழ்க்கை படிப்பினை உங்களுக்கு கிடைத்திருக்கும். அவை என்ன? என ஆராந்து கண்டறிங்க. அதே தவறை ‘அடுத்து வாழ போகும் வாழ்வில் செய்ய கூடாது. அந்த தவறை தவிர்த்து வாழனும்’ என்ற உறுதிமொழி எடுங்க.
மூன்றாவதாக,
மறுபிறவி எடுத்தது போல மனதளவில் நினைத்துக்கோங்க. ‘புது வாழ்க்கை நோக்கத்தை’ ( Life Purpose ) ஏற்படுத்துங்க.
இந்த நோக்கத்திக்காக, புது வாழ்க்கை வாழும் பொழுது எப்படி இருக்கும்? நன்மைகள் என்ன?’ என மனதில் அடிக்கடி கற்பனை செய்து பாருங்க. ஒரு புது வாழ்க்கை பாதை மனதில் உருவாகும்.
நான்காவதாக,
அந்த புது பாதையை பிடித்துக் கொண்டு, தேவையான சூழ்நிலைகளை நேர்மறையாக அமைத்து, புதியதாக வாழ ஆரம்பிங்க.
வாழ ஆரம்பிக்கும் பொழுது ஆரம்பத்தில் புதிது என்பதால் பழக கடினமாக இருக்கும். எப்பொழுதும், எதையுமே முதல் முறை செய்யும் பொழுது கடினமாக தான் இருக்கும். திரும்ப திரும்ப செய்யும் பொழுது, பழக்கப்பட்ட எளிதான விஷயமாக மாறி விடும்.
இப்பொழுது நீங்க எளிதில் செய்யும் பல விஷயங்கள் முதல் முறை நீங்க செய்ய ஆரம்பித்த பொழுது கடினமாக தான் இருந்திருக்கும். யோசித்து பாருங்க.
‘நடந்தது நடந்து விட்டது, இனி நடக்க போவதை சரியாக அமைத்து கொள்ளலாம்’, என விழிப்புடன் புது வாழ்க்கை பாதையை வைராக்கியத்துடன் நீங்க உருவாகும் பொழுது வாழ்க்கையை உங்களால் திரும்ப வாழ ஆரம்பிக்க முடியும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.